முன்னாள் எம்.பி.சந்தன கத்ரிஆரச்சி கைது!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆரச்சி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் துப்பாக்கிகள் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பிலியந்தலையிலுள்ள அவரது வீட்டை சோதனைக்குட்படுத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்தார்.

இதன்போது ரி – 56 ரக துப்பாக்கிகள் 2, எம், 221 ரி – 56 ரக தோட்டாக்களும், மேலும் சில தோட்டாக்களும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சந்தன கத்ரிஆரச்சி, கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 

Related Articles

Latest Articles