முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முப்படையினரால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அடுத்த வாரம் முதல் நீக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்படுமெனவும் அவர் நாடாளுமன்றத்தில் இன்று கூறினார்.
பாதுகாப்பு மீளாய்வின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த பதினொரு மாதங்களில் மாத்திரம் முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பதற்காக 1,448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், அது பொதுமக்களின் பணத்தை வீணடிக்கும் செயலென அமைச்சர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசீலனை செய்த பின்னரே முடிவு எடுக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.