முன்னாள் பிரதமரிடம் CID வாக்குமூலம்

மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பல அரச மட்ட அதிகாரிகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்த நிலையில், அதில் சிலர் கைது செய்யப்பட்டமையும குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles