முன்பள்ளி பாடசாலைகளின் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – லெட்சுமனார் சஞ்சய்

பிள்ளைகளின் கல்வியில் முதல் படியாக காணப்படும் முன்பள்ளி பாடசாலைகளின் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

பதுளை கனவரல்ல முன்பள்ளி பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார்.இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில் அத்திவாரம் முறையாக காணப்பட்டாலே முடிவு உறுதியாக காணப்படும்.

அதுபோல பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய முன்பள்ளி பாடசாலை வளங்களை அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென குறிப்பிட்டார்.மேலும் மலையக மக்கள் முன்னணி தலைவர் ராதாகிருஸ்ணன் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு சென்றுள்ளதாகவும் விரைவில் எவ்வித குறைபாடுகளுமற்ற முன்பள்ளி பாடசாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கனவரல்ல தோட்ட நலன்புரி உத்தியோகத்தர்,முன்பள்ளி ஆசிரியர்கள்,பெற்றோர்கள், மாணவர்களென பலரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

 

Related Articles

Latest Articles