முப்பாட்டன் கனவில்வந்து கூறியபடி புதையல் தோண்டிய எழுவர் கைது!

காலஞ்சென்ற முப்பாட்டன் கனவில் வந்து கூறியதன் படி வீட்டின் நடுவில் புதையல் தோண்டிய வர்த்தகர் உள்ளிட்ட ஏழு பேரை கடவத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மாந்திரீகர் ஒருவரும் இருப்பதாகவும், புதையல் தோண்டுவதற்கு ஆலோசனை பெறுவதற்காக அவர் கண்டியில் இருந்து அழைத்து வரப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த வீடு முன்னர் தொலைக்காட்சி நாடக நடிகர் ஒருவருக்கு சொந்தமாக இருந்தது. பின்னர் அதை இந்த வர்த்தகர் கொள்வனவு செய்துள்ளார்.

சந்தேக நபர்களை நேற்று 26 ஆம் திகதி மஹர நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது இவர்களை எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது.

Related Articles

Latest Articles