மும்பை, பெங்களூரு அணிகள் இன்று மோதல்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் மல்லுக்கட்டுகிறது.

.இந்த சீசனை மோசமாக தொடங்கிய மும்பை அணி முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தானுக்கு எதிராக) வரிசையாக தோற்றது. ஒரு வழியாக உள்ளூரில் நடந்த கடந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை தோற்கடித்து வெற்றிக்கணக்கை தொடங்கியது.

இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன், ரோகித் சர்மா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, டிம் டேவிட், ஒரே ஓவரில் 32 ரன் விளாசிய ரொமாரியோ ஷெப்பர்டு ஆகியோரின் அதிரடியால் மும்பை அணி 234 ரன்கள் குவித்ததோடு, அதை வைத்து டெல்லியை 205 ரன்னில் கட்டுப்படுத்தியது.

காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள 20 ஓவர் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தனது முதல் ஆட்டத்தில் டக்-அவுட் ஆனார். என்றாலும் இன்றைய ஆட்டத்தில் அவரது வாணவேடிக்கையை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

சாதகமான உள்ளூர் சூழலை பயன்படுத்தி தொடர்ந்து 2-வது வெற்றியை வசப்படுத்தும் முனைப்புடன் மும்பை அணியினர் ஆயத்தமாகிறார்கள்.

பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த சீசனிலும் தகிடுதத்தம் போடுகிறது. 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள அந்த அணி பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. சென்னை, கொல்கத்தா, லக்னோ, ராஜஸ்தான் ஆகிய அணிகளிடம் ‘சரண்’ அடைந்து விட்டது.

ஆரஞ்சு நிற தொப்பியை தக்கவைத்துள்ள விராட் கோலி (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 316 ரன்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் பெங்களூரு அணியில் தடுமாறுகிறார்கள்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles