முற்போக்கு கூட்டணியில் இணைய பல கட்சிகள் படையெடுப்பு!

தமிழ் முற்போக்கு கூட்டணியில் இணைவதற்கு மலையகத்தை மையப்படுத்தி இயங்கும் மேலும் சில அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் முன்வந்துள்ளன.

இது தொடர்பில் மேற்பபடி கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டணியின் தலைமைப்பீடத்துக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது.

அதேபோல காலி, மாத்தறை, கேகாலை மற்றும் வவுனியா பகுதிகளில் இயங்கும் அரசியல்சார் அமைப்புகளும் முற்போக்கு கூட்டணியுடனா பயணத்துக்கு தயாராகிவருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles