முற்போக்கு கூட்டணியும் டில்லி பறக்க தயாராகிறது

” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சென்றுவந்த பிறகு நாமும் செல்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

ஹட்டனில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் டில்லி பயணம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இந்திய பிரதமரை சந்திப்பதற்கான வாய்ப்பை நாம் இன்னும் கோரவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலில் அவர்கள் சென்று வரட்டும். அதன்பின்னர் நாம் செல்வதற்கான ஏற்பாடுகள் இந்திய தூதுரகம் ஊடாக முன்னெடுக்கப்படும்.

இந்தியாவுக்கு சென்றுள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் அந்நாட்டு பிரதமரை சந்திக்க முடியாமல்போனது வருத்தமளிக்கின்றது. ஏன் இலங்கை நிதி அமைச்சர் இவ்வாறு உதாசீனம் செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை.” -என்றார்.

Related Articles

Latest Articles