தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் 28 ஆம் திகதி ஹட்டனில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்துள்ள ஜனநாயக ரீதியான அகிம்சை போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தருவதற்கு முன்வர வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை முன்னிலைப்படுத்தியும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஹட்டன் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
இந்த போராட்டமானது முழுமையாக தொழிலாளர்களை முன்னிலைப்படுத்தியும் அவர்களுடைய சம்பள உயi;வை பெற்றுக் கொள்வதற்காகவுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போராட்டத்தில் அரச உத்தியோகஸ்தர்கள் , வர்த்தகர்கள் உட்பட அனைத்து துரப்பினரும் இணைந்து கொண்டு அதரவு தெரிவிக்க வேண்டும்.
இந்த போராட்டத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்திருந்தாலும் கட்சி பேதங்களை மறந்து அனைத்து தரப்பினரும் ஆதரவ தெரிவிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.இந்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதன் மூலம் நாம் பெருந்தோட்ட கம்பனிகளுக்கான ஒரு அலுத்தத்தை கொடுக்க முடியும்.அதே நேரம் எமது ஒற்றுமையையும் பெருந்தோட்ட கம்பனிகள் புரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.