” தமிழ் முற்போக்கு கூட்டணி தடம்மாறி பயணிக்கின்றது. வழி தவறி செல்கின்றது. கூட்டணி தலைவர்களின் சுயநல போக்கால்தான் ஆறாக இருந்த எம்.பிக்களின் எண்ணிக்கை இன்று இரண்டாக குறைந்துள்ளது. நான்கு மாவட்டங்களில் இருந்த பிரதிநிதித்துவம் ஒரு மாவட்டம் என்ற நிலைக்கு வந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியிடம் தேசியப் பட்டியலுக்காக கையேந்தும் நிலை காணப்படுகின்றது. இதனை நாம் அன்றே சுட்டிக்காட்டி இருந்தோம்.
தமிழ் முற்போக்கு கூட்டணியானது அடுத்த நிலைக்கு செல்லும். அந்த நிலைமையில் தற்போதைய தலைவர்கள் தூக்கியெறியப்படுவார்கள். புதிய தலைமைத்துவம் அங்கு உருவாகும். மலையகத்துக்கான மாற்று சக்தியாக அது உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது.”
இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ரஞ்சன் அருண்பிரசாத்துடன் நடைபெற்ற நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.