‘‘சஜித்துடன் சேர்ந்ததை நியாயப்படுத்தவே தமிழ் முற்போக்குக் கூட்டணி பல்வேறு காரணங்களைக் கூறுகிறது’’
இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. ஊடகப் பிரதானிகளை நேற்று சந்தித்த பிரதான நிகழ்வின் பின்னர் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள் சிலருடன் சம்பாஷணையில் ஈடுபட்டார் ரணில்.
தமிழ் முற்போக்கு கூட்டணியினர் சஜித் துக்கு ஆதரவளித்துள்ளனர். ஆனால் அவர்க ளுடன் நீங்கள் பேச்சு நடத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முயலவில்லை என்ற விமர்சனம் உள்ளதே என்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் ஜனாதிபதியிடம் கேள்வி யெழுப்பினார். அதற்கு பதிலளித்தபோதே மேற்கண்டவாறு கூறிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் அடிக்கடி என்னுடன் பேசியவர்கள்.
இப்போது அவர்கள் சஜித்துடன் இணைந்து விட்டு அதனை நியாயப்படுத்த என்னை விமர்சிக்கின்றனர்.எனது அமைச்சரவையில் திகாம்பரம் இருந்தார்.அமைச்சராக மனோவும் இருந்தார். என்ன செய்தார்கள்? இப்போதுள்ள நிலைமையில் என்னுடன் இணைந்து பணியாற்றுங்கள் என்றுதான் கூறினேன். அதை விடுத்து குறைகூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அவர்களைப்பற்றி கதைப்பதே வேஸ்ட் என்றார் ரணில்.
நன்றி – தமிழன்










