முற்போக்கு கூட்டணி 6 ஆசனங்களுக்கு மேல் கைப்பற்றும்!

பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆறு ஆசனங்களுக்கு மேல் இம்முறை கைப்பற்றும் என்று கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

“தமிழ் முற்போக்கு கூட்டணி இம்முறை கொழும்பு, நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தும்.

கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இம்முறை பிரதிநிதித்துவத்தை வெல்வோம். கொழும்பு மாவட்டத்தில் இரண்டாவது பிரதிநிதித்துவத்தை பெறுவதற்குரிய சாத்தியமும் உள்ளது.” – எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

அத்துடன், தான் ஊழல் அற்ற அரசியல்வாதி எனவும், தனது கரங்களில் கறை படியவில்லை எனவும் மனோ கூறினார்.

Related Articles

Latest Articles