முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த பொது நினைவுத் தூபி நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இம்முற்றத்தில் வைப்பதற்காக கொண்டுவரபட்டிருந்த பொது நினைவுக்கல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளது.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.