மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள 400 நிரப்பு நிலையங்கள்

400 நிரப்பு நிலையங்கள் மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, பெற்றோல் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டண முறையின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள், அடுத்த நாளுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள, முன்கூட்டியே பணம் செலுத்தும் திட்டத்தை, பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசாங்கம் 700 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் இதற்காக முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மறுநாளுக்கான எரிபொருளை பெறுவதற்கு முந்தைய நாள் இரவு 9:30 க்கு முன்னர் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக குமார் ராஜபக்ஷ கூறினார்.

எனினும், அன்றைய நாளுக்கான பணவரவை கணக்கிட்டதன் பின்னர் பணம் செலுத்துவது அவர்களுக்கு கடினமாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

முந்தைய நாள் இரவு 9:30 க்குள் பணம் செலுத்தப்படாவிட்டால், அடுத்த நாள் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் (CPSTL) எரிபொருளை வழங்காது என்று அவர் கூறினார். இதன் விளைவாக, சில நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இரவு 9:30 மணிக்கு முன் பணம் செலுத்த முடியாது போனமையினால் எரிபொருளுக்கான நீண்ட வரிசை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். லங்கா ஐஓசி நிரப்பு நிலையங்களும் இதேபோன்ற கட்டண முறையைக் கொண்டுள்ளன. எனினும், அவை நள்ளிரவு வரை கால அவகாசத்தை வழங்கியுள்ளன.

நாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் நுகர்வோர் தேவையும் அதிகரித்துள்ளதால் எரிபொருள் விநியோகம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று குமார் ராஜபக்ஷ கூறினார்.

நாளொன்றுக்கு டீசல் மற்றும் பெற்றோல் விநியோகத்தை முறையே 4000 மெட்ரிக் டன், 3000 மெட்ரிக் டன் என்றவாறு பெற்றோலிய கூட்டுத்தாபனம் மட்டுப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles