ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்ட நவீன் திஸாநாயக்க, சிறிகொத்தவில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து நேற்று (15) வெளியேறிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனக்கு நெருக்கமான சிலருடன் வருகைதந்து அலுவலகத்தில் இருந்த முக்கிய ‘பைல்களை’ எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார் எனவும் கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தன தெரிவுசெய்யப்பட்டுள்ள சூழ்நிலையிலேயே , அதிருப்தியில் நவீன் கட்சி தலைமையகத்திலிருந்து வெளியேறியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
தனது மாமாவான கருஜயசூரியவுக்கு ஐ.தே.கவின் தலைமைப்பதவி கிடைக்காததையிட்டும் நவீன் தனக்கு நெருக்கமானவர்களிடம் கவலையை வெளியிட்டுள்ளார்.