அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் என்றழைக்கப்படும் மூன்றாவது சொட்டு மருந்தையும் பெற்றுக்கொண்டார்.
65 வயதுக்கு மேற்பட்ட நோய் அறிகுறிகளை கொண்ட நபர்களுக்கு மூன்றாவது மருந்தளவாக பைசர் தடுப்பூசியை செலுத்த அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கடந்த வாரம் முன்னர் அங்கீகாரம் வழங்கியிருந்தனர்.
கொவிட் வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு, தடுப்பூசி செலுத்திக்கொள்வதே ஒரே வழி என்று பூஸ்டர் சொட்டைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
78 வயதாகும் ஜோ பைடன், கடந்த டிசம்பர் மாதம் 21ம் திகதி தனது கொவிட் முதலாவது மருந்தளவையும், ஜனவரி 11ம் திகதி இரண்டாவது மருந்தளவையும் பெற்றுக்கொண்டார்.
மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஜோ பைடன் பூஸ்டர் மருந்தைப் பெற்றுக்கொள்ளும் வீடியோவையும் வெளியிடப்பட்டுள்ளது.
Today I got my COVID-19 booster shot—and just like my first and second dose, it was safe and easy.
Get vaccinated. Together, can we save lives and beat this virus. pic.twitter.com/gtNAQqmOoj
— Joe Biden (@JoeBiden) September 27, 2021