‘மூன்றாவது தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக்கொள்வோம்’

இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடாகும் என்று பல நாடுகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனால் இந்த வருடத்தில் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

எதிர்பார்த்த அளவில் சுற்றுலா பயணிகளின் வருகை இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்காக விசேட பிரச்சார நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை மக்கள் கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டிகளை உரிய முறையில் கடைப்பிடித்து வாழ்ந்து வருவதாக பல வெளிநாட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளிலும் கொவிட் தொற்று நிலைமை மாறும் பட்சத்தில் மேலும் பல சுற்றுலா பயணிகள் இலங்கை வருவார்கள் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சு குறித்து அமைச்சர் பதிலளிக்கையில், இவ்வாறான சர்வதேச நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஜப்பான், சீனா, இந்தியா நாடுகளுடன் தற்போதைய டொலர் நெருக்கடி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றன. எவ்வாறாயினும். 6.9 பில்லியன் கடனை திருப்பி செலுத்த அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எதிர்காலத்தில் நோயை முற்றாக கட்டுப்படுத்தி கொள்ள 3 ஆவது தடுப்பூசியை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

உலக நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் பரவி வருகிறது. இதனால் தொற்றின் காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல் நிலையை தடுப்பதற்கு 2 தடுப்பூசிகளையும் பெற்றுகொள்வதுடன் 3 ஆவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கும் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் பொது மக்களை கேட்டுக்கொண்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles