மெக்சிக்கோவின் துறைமுக நகரான Acapulcoவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
மெக்சிக்கோ தலைநகரில் இருந்து சுமார் 230 மைல் தூரத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் உள்ளிட்ட நாட்டின் ஏராளமான இடங்களில் உணரப்பட்டுள்ளது.
பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், குறிப்பாக அதிகமான கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாகவும் உள்ளுர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சுமார் 16 லட்சம் பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மெக்சிக்கோ மின்சாரத்துறை அறிவித்துள்ளது.
உயிர் சேதங்கள் குறித்து உடனடியாக விபரங்கள் தெரியவரவில்லை!