‘மெனிக்கே மகே ஹித்தே’ புகழ் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு டுபாயில் ‘கோல்டன் விசா’ விருது

இலங்கையின் பிரபல இளம் பாடகியான ‘மெனிக்கே மகே ஹித்தே’ புகழ் யோஹானி டி சில்வாவுக்கு, டுபாயில் ‘கோல்டன் விசா’ விருந்து வழங்கப்பட்டுள்ளது.

கலை, கலாசாரம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு டுபாயால் வழங்கப்படும் உயரிய விருதாக ‘கோல்டன் விசா’ கருதப்படுகின்றது.

பாடகி யோஹானி இலங்கையின் பாரம்பரிய நாட்டுப்புற இசை மற்றும் சமகால பாப் இசை ஆகியவற்றின் தனித்துவமான பாடல்களால் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெனிக்கே மகே ஹித்தே பாடல்மூலம் இவர் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றார்.

Related Articles

Latest Articles