நுவரெலியா மாவட்டம், லிந்துலை – மெராயா தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புணராவர்த்தன பஞ்சகுண்டபக் ஷ அஷ்டபந்தன நூதனப் பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேக கிரியைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 5.00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகும்.
21 ஆம் திகதி விஷேட கிரியைகள் கங்கா தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வுகளும், 22 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அடியார்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றும்.
மங்களகரமான சோபகிருது வருடம் தை 10 நாள் 24 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை வரும் சுப முகூர்த்த சுப வேளையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று மகேஷ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
கும்பாபிஷேக கிரியைகளை மெராயா ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.வே. முத்துக்குமாரக் குருக்கள் தலைமையில் பிரதிஷ்டா பிரதம குருவாக பிரதிஷ்டா பூஷணம்,வேதாகம கலாநிதி, சொற்பொழிவு வேந்தன் யாழ்ப்பாணம் மல்லாவி சிவஸ்ரீ. குமார பிரபாகர குருக்கள் நடாத்தி வைப்பார்கள். இவ் குடமுழுக்கு பெருஞ்சாந்தி விழாவில் கலந்து கொண்டு எல்லா வல்ல அம்மனின் திருவருள் கிடைக்க அனைவரையும் ஆலய பரிபாலன சபையினர்கள் மற்றும் தோட்ட பொது மக்கள் அழைக்கின்றனர்.
தகவல் : நீலமேகம் பிரசாந்த்
