மொசாட் உளவு பிரிவுக்கே விபூதி அடித்துள்ள ஹமாஸ் போராளிகள்……நடந்தது என்ன?

பலமான உளவுத்துறையை கொண்டுள்ள இஸ்ரேலுக்குள் ஊடுருவி, ஹமாஸ் போராளிகள் குழு தாக்குதல் நடத்தியுள்ள விவகாரம் அந்நாட்டின் உளவுப்பிரிவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், எங்கு தவறிழைக்கப்பட்டுள்ளது என்ற விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கையில், ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுக்கும், காசா பகுதிக்கும் இடையில் உள்ள பலமான எல்லையைக் எப்படி இலகுவாக கடந்துள்ளனர் என்ற வினாவும் எழுகின்றது.

அதேபாேல, ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன.

இஸ்ரேலிய உள்நாட்டு உளவுத்துறையான ஷின் பெட் (Shin Bet), அந்நாட்டின் வெளிநாட்டு உளவு அமைப்பான மொசாட் (Mossad) மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் அனைத்து அமைப்புகளுக்கும் இப்படியொரு தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல் தெரியவராமை அதிர்ச்சியளிக்கின்றது.

ஒரு வேளை அவர்களுக்குத் தெரிந்திருந்தும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டனரா என்ற கேள்வியும் எழுகின்றது.

மத்திய கிழக்கில் உள்ள நாடுகளில் இஸ்ரேல்தான் மிகவும் விரிவான மற்றும் அதிக நிதியளிக்கப்பட்ட உளவு அமைப்பைக் கொண்டுள்ளது.

இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட், பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்கு உள்ளும், லெபனான், சிரியா மற்றும் பிற இடங்களிலும் தனக்குத் தகவல் தரும் உளவாளிகளைக் கொண்டுள்ளது.

கடந்த காலங்களில், ஆயுதமேந்திய குழுக்களுடைய தலைவர்களின் அனைத்து செயல்பாட்டுகளையும் முழுமையாக அறிந்து, அவர்களைக் குறித்த நேரத்தில் படுகொலை செய்ததுள்ளது இஸ்ரேல்.

சில நேரங்களில், தன்னுடைய உளவாளிகள் மூலம் கார்களில் ஜிபிஎஸ் டிராக்கரை பொருத்தி, ட்ரோன் தாக்குதல்கள் மூலம் தனது திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில், இஸ்ரேல் உளவு அமைப்பின் உதவியோடு, அந்நாட்டின் பாதுகாப்புப் படை ‘வெடிக்கும்’ மொபைல் போன்களை கூட பயன்படுத்தித் தனது திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.

தரையில், காசாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள பதற்றமான எல்லையில் கேமராக்கள், தரை-மோஷன் சென்சார்கள் மற்றும் வழக்கமான இராணுவ ரோந்துகள் உள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles