மேற்கிந்திய தீவுகளை பந்தாடியது ஆஸி அணி

டி20 உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ் அரை சதம் அடித்து அசத்தினர்.

டி20 உலக கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்திருந்தது.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், பிஞ்ச் களமிறங்கினர். 3-வது ஓவரில் பிஞ்ச் 9 ரன்னில் போல்ட் என்ற முறையில் அவுட் ஆனார்.

இதனையடுத்து டேவிட் வார்னர் – மிட்செல் மார்ஸ் ஜோடி சிறப்பாக ஆடி இருவரும் அரை சதம் அடித்தனர். 1 ரன் எடுத்தால் வெற்றி பெரும் நிலையில் கெய்ல் பந்து வீச்சில் மிட்செல் மார்ஸ் 53 ரன்னில் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

16.2 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 56 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

Related Articles

Latest Articles