மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றிநடை…

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

7ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. துபாயில் இன்று நடைபெறும் குரூப்-1 பிரிவு லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி, தென்ஆப்பிரிக்காவை சந்தித்தது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி, மே.இ. தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது.

மே.இ. தீவுகள் அணி சிறப்பான துவக்கம் பெற்றது. துவக்க ஜோடி 73 ஓட்டங்கள் சேர்த்தது. எனினும், அடுத்த வந்த பேட்ஸ்மேன்கள் தென் ஆப்பிரிக்க அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் அதிரடியாக ஆட சிரமப்பட்டனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143- ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக எவின் லெவிஸ் 56 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 144-ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 18.2 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

Related Articles

Latest Articles