லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 3700 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட மற்றுமொரு எரிவாயுக் கப்பல் நேற்று (4) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன், லாப் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 3200 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட எரிவாயுக் கப்பல் இன்று (5) இரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக இரு நிறுவனங்களினதும் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இறக்குமதி செய்யப்பட்ட வாயுக்களின் கலவையை பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் நளைய தினம் (06) முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கிப்படுகின்றது.
எரிவாயுவை இதுவரை சந்தைக்கு அதிகபட்ச கொள்ளளவில் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் சராசரி விநியோகம் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் வழக்கம் போல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் எப்போது வழமைக்கு திரும்புமென உறுதியாக கூற முடியாது என எரிவாயு நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.










