மேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி

Google Play மற்றும் Apple App Storesகளில் சிறந்த நிதிச் செயலி தரப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது

அறிமுகத்தின் முதல் கட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கையாளக்கூடிய புதிய Interface மற்றும் பல அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் சிறந்த புத்தாக்கங்களைக் கொண்ட வங்கியான HNB அதன் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வங்கி செயலி மூலம் சராசரி மாத கொடுக்கல் வாங்கல்கள் 10 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது, இது தொழில்துறையில் ஒரு புதிய தரத்தை அமைத்து, தொழில்நுட்ப ரீதியாக செயல்படும் வங்கியில் அதன் தலைமைத்துவத்தை நிரூபித்துள்ளது.

இந்த செயலி 2020 டிசம்பரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, மாதா மாதம் கொடுக்கல் வாங்கல்களில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் Google Play Stores தற்போது இலங்கை டிஜிட்டல் வங்கி செயலிகளிடையே (App) சிறந்த மதிப்பீடு செய்யப்பட்ட செயலிகளில் ஒன்றாகும். இன்றுவரை, இது 130,000க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது மற்றும் செயற்படும் பயனரை தக்க வைக்கும் விளிம்பு (Active user retention margin) 70-75% ஆகும்.

‘இந்த சேவையானது உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கியைப் போலவே வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும். இந்த சேவைகளை அதிக நம்பிக்கை மற்றும் ஏற்றுக்கொள்வதை நோக்கிய சந்தையை வழிநடத்துவதில் HNB பெருமிதம் கொள்கிறது.

எங்கள் மேம்படுத்தல் செயல்முறை வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளுக்கு அதிகமான அனுபவங்களைச் சுற்றி முழுமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் வாடிக்கையாளர்களுடன் கலந்தாலோசித்து அவர்களின் எல்லா ஆலோசனைகளையும் கவனமாக பதிவுசெய்து இறுதியாக UI மற்றும் UX வடிவமைப்பிற்காக உள்ளடக்கினோம்.

இந்த மறுவடிவமைப்பின் வெற்றி எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் பிரதிபலிப்புக்களில் இதுந்து தெளிவாகத் தெரிகிறது.’ என HNB, வாடிக்கையாளர், வங்கி நடவடிக்கைகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வங்கி நடவடிக்கைகள் தொடர்பிலான பிரதி பொது முகாமையாளர் சஞ்ஜேய் விஜேமன்னே தெரிவித்தார்.

HNB டிஜிட்டல் வங்கி App, Google Play மற்றும் Apple App Storesகளில் முறையே 4.7 மற்றும் 4.6 என்ற ளுவயச சுயவiபெஐ கொண்டுள்ளது.
இது வங்கியிலுள்ள மென்பொருள் பொறியியலாளர் குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் ஒவ்வொரு அம்சமும் வங்கியின் தேவைகளுக்கு ஏற்ப விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்ட விடயங்கள், சேவைகள், மேலதிக அம்சங்கள் மற்றும் ஒட்டுமொத்த UX/UI மேம்பாடுகள் உள்ளிட்ட நிலையான புத்தாக்கங்களுடன், HNB டிஜிட்டல் வங்கி செயலி (App) வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் டிஜிட்டல் வங்கி அனுபவத்தின் மீது முழுமையான அதிகாரத்தை வழங்குகிறது.

எடுத்துக்காட்டாக, புதிய பயனர்கள் தங்கள் கணக்கு இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் கையடக்க தொலைபேசி எண் மூலமான மூன்று படிமுறைகளில் எளிதாக பதிவு செய்யலாம்.

அட்டை விவரங்களை உரிய முறையில் உள்ளடக்கி இப்பதிவு முறையை பூர்த்தி செய்யலாம்.

இந்த எளிய செயல்முறையின் விளைவாக, 130,000க்கும் மேற்பட்ட பதிவு செய்த பயனர்களில் 2% மாத்திரமே முதன்முறையாக டிஜிட்டல் வங்கிச் சேவைக்கு அணுகும் பணியில் இணைவதற்கு வங்கியின் உதவிகளைப் பெற்றனர்.

இதேபோல், HNB டிஜிட்டல் வங்கி செயலி ஒரு தனித்துவமான ‘பீக் பேலன்ஸ்’ (“Peek Balance”) தீர்வை வழங்குகிறது, இது வாடிக்கையாளர்கள் முழுமையான உள்நுழைவு செயல்முறையிலும் செல்லாமல் உடனடி கணக்கு நிலுவைகளை பெற்றுக் கொள்ள அனுமதிக்கிறது.

செயலி கொடுக்கல் வாங்கல் வரலாற்றில் எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. இதன் பொருள் வாடிக்கையாளர்கள் தாங்கள் செய்யும் முதல் கொடுக்கல் வாங்கலைக் கூட எந்த இடையூறும் இல்லாமல் பார்க்க முடியும்.

கூடுதலாக, இந்த செயலி “Favorites” மற்றும் “Schedule” கொடுப்பனவுகளை மேற்கொள்ள வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது, இது ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை மேலும் எளிதாக்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை “Hidden” அல்லது “View Only” என்ற வசதியை அமைத்து அவர்களின் பரிவர்த்தனை எல்லைகளை தனிப்பயனாக்க விருப்பத்துடன் தங்கள் வங்கி அனுபவத்தை மேலும் கட்டுப்படுத்தவும் செயலி வாடிக்கையாளர்ரை அனுமதிக்கிறது.

இது HNB கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் அறிக்கை விபரம், நிலுவைத் தொகை மற்றும் கட்டண கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும். கூடுதலாக, நடைமுறைக் கணக்கு நிர்வகிப்பு, சேமிப்பு கணக்குகள், கடன்கள் மற்றும் நிலையான வைப்புக்கள் உட்பட அனைத்து வழக்கமான வங்கி சேவைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும், மேலும் செயலியின் எதிர்கால புத்தாக்கங்கள் மூலம் கூடுதலான விடயங்களையும்; உள்ளடக்கப்படும்.

பாதுகாப்பான டிஜிட்டல் செயலி தொடர்பான அணுகலை சரிபார்க்க பொது மற்றும் ஆள் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தையும், எளிதான மற்றும் பாதுகாப்பான அணுகல் செயல்முறையை வழங்க “Device Binding” செயல்முறையையும் HNB செயலி பயன்படுத்துகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு வாடிக்கையாளர் மற்றொரு சாதனத்திலிருந்து தங்கள் கணக்கில் உள்நுழைந்தால், இரண்டு காரணி அங்கீகார (அவதானம் அடிப்படையிலான அங்கீகாரம்) செயல்முறை தேவைப்படும், வாடிக்கையாளரின் கணக்கு ஆரம்பிக்கையில் பதிவு செய்யப்பட்ட கையடக்க தொலை பேசிக்கு அனுப்பப்படும் ‘ஒரு தடைவ மாத்திரம் செல்லுபடியாகும் கடவுச்சொல்லை’ உள்ளடக்க வேண்டும்.

HNB வாடிக்கையாளர்களுக்கு செயலி ஊடாக “Cash to Mobil” வசதிகளைப் பயன்படுத்தி, HNB தன்னியக்க டெலர் இயந்திரத்தில் பணத்தை பெற்றுக் கொள்வதற்காக எந்தவொரு நபரின் கணக்கிற்கும் பணத்தை அனுப்பவும் முடியும்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles