தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 886 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்காக கொழும்புக்கு வருபவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் உண்மையாலும், உரிய அனுமதியுடன் அத்தியாவசிய சேவைகளுக்காகவா வருகின்றனர் என்பது தொடர்பில் இக்குழு பரிசோதிக்கும்.
எனவே, அநாவசியமான முறையில் கொழும்புக்குள் வந்தால் அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.










