‘மேல்மாகாண உதவி ஆசிரியர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு’!

மேல்மாகாணத்தில் ஆசிரியர் தகுதிக்கான பயற்சிகளை முடித்துள்ள உதவி ஆசிரியர்களை ஆசிரியர் தரம் 3.1 இல் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மேல்மாகாண ஆளுநர், பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளார்.

மேல்மாகாணத்தில் ஆசிரியர் தகுதிக்கான பயிற்சி நெறிகளை முடித்து நீண்டகாலம் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படாது நிர்க்கதியாகியுள்ள 50 பேர்வரையான உதவி ஆசிரியர்கள் தமது நிலைமை குறித்து செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவந்ததை தொடர்ந்து உடனடியாக மேல்மாகாண ஆளுநருடன் இந்த விவகாரம் குறித்து நேரடி பேச்சுவார்த்தையொன்றை செந்தில் தொண்டமான், உரிய பிரதிநிதிகளுடன் நேற்றுமுன்தினம் ஆளுநர் அலுவலகத்தில் நடத்தியிருந்தார்.

இதன்போது, உதவி ஆசிர்களின் எதிர்கொண்டுள்ள இந்த நிலைமை, இவர்கள் உதவியாசிரியர்களாக உங்வாங்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு உள்ளிட்ட சட்ட ரீதியான சிக்கல்களை ஆளுநரிடம் எடுத்துரைத்தார்.

ஆசிரியர்களின் நிலைமைகளை உணர்ந்துக்கொண்ட ஆளுநர், ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான தகுதிகளை இவர்கள் பூர்த்திசெய்துள்ள போதிலும் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட பாடசாலைகளில் வெற்றிடங்கள் காணப்பட வேண்டும் என்பதுடன், அரசாங்கம் தீர்மானித்தால்தான் இவர்களை உள்வாங்க முடியும்.

என்றாலும், இவர்களின் நிலைமை கருத்திற்கொண்டு அடுத்தவரும் உள்வாங்கள்களில் இவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கையெடுப்பதாக மேல்மாகாண ஆளுநர், செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்தார்.

ஆளுநரிருடன் சந்திப்பை ஏற்படுத்தி தாம் எதிர்கொண்டுள்ள இந்த சிக்கலான நிலைமைக்கு தீர்வுகாண நடவடிக்கையெடுத்த செந்தில் தொண்டமானுக்கு உதவி ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஊவாமாகாணத்திலும் இதே சிக்கல் நிலைமைதான் காணப்பட்டது. என்றாலும், அங்கு செந்தில் தொண்டமான் தமது பலத்தை பயன்படுத்தி 90 சதவீதமானவர்களுக்கு நியமனங்களை அவர் அமைச்சுப் பதவி வகித்த காலத்தில் பெற்றுக்கொடுத்தார்.

மத்திய மாகாணத்திலும் இந்த சிக்கல் நிலைமை காணப்படும் சூழலில் கடந்தவாரம் மத்திய மாகாண ஆளுநருடன் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், செந்தில் தொண்டமான், கணபதி கனகராஜ் மற்றும் மதியுகராஜா ஆகியோர் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles