சுகாதார நடைமுறைகளின் பிரகாரம் இம்முறை மே தின கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவவால் கடந்தவருடம் மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்க முடியாமல் போனது. சிறு அளவிலான நிகழ்வுகளே இடம்பெற்றன.
இந்நிலையில்தான் இம்முறை மே தினத்தை உரிய வகையில் அனுஷ்டிப்பதென அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க பிரிவுகள் தீர்மானித்துள்ளன.
இது தொடர்பில் சுகாதார தரப்புகளுக்கு அறிவித்து அனுமதி பெறுவதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டாலும், பேரணிக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே.
கொரோனா அச்சுறுத்தல் பகுதிகளில் எப்படியும் நிகழ்வுகளை நடத்த முடியாது, எனவே, பாதுகாப்பான பகுதிகளிலேயே கட்சிகளால் ஏற்பாடுகளை செய்யவேண்டும்.