” மே தினத்தை தவிர்த்து ‘மலையகம் – 200’ இற்கு முன்னுரிமை வழங்க திகா அணி முடிவு

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்டங்கள் இம்முறை தோட்ட வாரியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இது தொடர்பான உத்தியோகத்தர் சபை கலந்துரையாடல் கூட்டம் சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கு அமைய அட்டன் தலைமைப் பணிமனையில் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தொழிலாளர் தேசிய சங்கம் 1965 மே மாதம் முதலாந் திகதி ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 58 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது, 2025 இல் அதன் வைரவிழா கொண்டாடப்படவுள்ளது. அத்தோடு, இந்த ஆண்டில் இந்திய வம்சாவளி மக்கள் தென்னிந்தியாவீருந்து வருகை தந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாவதை நினைவுகூரும் வகையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20 ஆந் திகதி நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாரிய நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

எனவே, இந்த ஆண்டில் மேதின விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதை தவிர்த்து, மலையகம் – 200 நிகழ்வுக்கு முன்னுரிமை தருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், நுவரெலியா, அட்டன், மஸ்கெலியா, சாமிமலை, பொகவந்தலாவ, பத்தனை, கொட்டகலை, தலவாக்கொல்லை, லிந்துல, அக்கரபத்தன, டயகம, பூண்டுலோயா, நானுஓயா, இராகலை, புசல்லாவ, பதுளை பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட தோட்டங்களை மையமாக வைத்து மே முதலாந் திகதி கூட்டங்களை எளிமையான முறையில் அனுஷ்டிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான தலைவர் பழனி திகாம்பரம், பிரதித் தலைவர் எம். உதயகுமார் உட்பட முக்கியஸ்தர்கள் கூட்டங்களில் கலந்து கொள்வார்கள்.

வழமைபோல், மேதினத்தன்று அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் சங்கத்தின் நலன் வேண்டி விஷேட பூஜை வழிபாட்டுடன் அட்டன் தலைமை அலுவலக வளாகத்தில் கொடியேற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles