மே 20 பாடசாலைகளுக்கு விடுமுறை – ஜுன் 06 கல்வி நடவடிக்கை ஆரம்பம்!

கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 06 ஆம் திகதி மீளஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை திட்டமிட்டவாறு எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி அட்டை மற்றும் பரீட்சை நிலையங்களுக்கு வினாத்தாள்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பரீட்சைக்கு தேவையான கண்காணிப்பு பணிக்குழாமினரும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles