மைத்திரியின் சகாக்கள் சஜித்துடன் சங்கமம்!

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் இருவர், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்று இணைந்துள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் ஹோமாகம அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான காமினி திலகசிறி , கெஸ்பேவ மாநகர சபையின் முன்னாள் தவிசாளரும், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான காமினி சில்வா ஆகியோரே இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து,ஐக்கிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

 

Related Articles

Latest Articles