ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் மகளான சதுரிகா சிறிசேனவின் வீடு உடைக்கப்பட்டு, 30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் களவாடப்பட்டுள்ளன என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு, பத்தரமுல்ல விக்ரமசிங்க புரவில் உள்ள வீட்டிலேயே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது.
பணம், தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை, ஸ்மார்ட் கைக்கடிகாரம், தங்க முலாம் பூசப்பட்ட சிங்கப்பூர் நாணயங்கள் 8, உலருணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை புத்தகப் பை என்பனவே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.
வீட்டின் முன் கண்ணாடிக் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து, திருடர்கள் சொத்துக்களை திருடிச் சென்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் கணவரான வர்த்தகர், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.










