மைத்திரியை பொதுவேட்பாளராக களமிறக்கியது நான் இழைத்த வரலாற்று தவறு

2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்த வரலாற்றுத் தவறை நிவர்த்தி செய்யும் வகையிலும், கட்சியை சரியான பாதையில் முன்னெடுத்து செல்வதற்குமே, மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, தாம் நீதிமன்றம் சென்றதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முறைப்படுத்தி, கட்சியைப் பலப்படுத்தவும் அதற்காக பங்களிப்பு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எவ்வாறெனினும் கட்சியின் தலைவர் பதவியை தாம் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியில் கல்விமான்கள் மற்றும் இளைய தலைமுறைக்கு முக்கிய பதவிகளை வழங்கி, கட்சிக்கு அவசியமான தலைமைத்துவத்தை வழங்குவதுடன் கட்சியை சரியான பாதையில் பலம் மிக்கதாக கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும், இது இலகுவான காரியமல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்கு எந்த ஒரு தேவையும் எமக்குக் கிடையாது. அதேபோன்று தமது புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அரசியலில் சம்பந்தப்படுத்தப் போவதில்லை. குடும்ப அரசியலுக்கு, தாம் எதிரானவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles