மைத்திரி, விமல், கம்மன்பிலவுக்கு எதிராக மொட்டு கட்சி அதிரடி தாக்குதல்!

” மொட்டு சின்னம் இல்லாதிருந்தால் மைத்திரிபால சிறிசேன, விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டவர்களுக்கு நாடாளுமன்றம் வந்திருக்கமுடியாது. எனவே, அரசிலிருந்து வெளியேறுவதாக இருந்தால் தாராளமாக வெளியேறிச்செல்லுங்கள்.”

இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மைத்திரிபால சிறிசேன, விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டவர்களுக்கு தனித்து போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா? ‘மொட்டு’ சின்னம் இல்லாவிட்டால் அவர்களால் வெற்றிபெற்றிருக்கமுடியாது. ‘மொட்டு’ சின்னத்தால்தான் நானும் வெற்றிபெற்றேன். எனவே, கூட்டு பொறுப்பை அவர்கள் காக்க வேண்டும்.

உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்குள் பேச்சு நடத்தி தீர்வைக்காண முற்பட்டிருக்க வேண்டும். அதனைவிடுத்து வெளியில் விமர்சனங்களை முன்வைத்ததால்தான் பங்காளிக்கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி சந்திப்புக்கு நேரம் வழங்கவில்ல என நினைக்கின்றேன்.

அரசிலிருந்து வெளியேறுவதாக இருந்தால் அவர்கள் செல்லலாம். அரசுக்குள் இருப்பதாக இருந்தால் அரசால் எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்கவேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles