ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பரப்புரைக் கூட்டம் இன்று அநுராதபுரத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு ஆளுங் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், இக்கூட்டத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணித்துள்ளது.
இந்தக் கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்ற வாதப் பிரதிவாதங்கள் ஆளும் கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ளன.
இது மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவின் அடுத்த தேர்தலுக்கான பிரசாரக் கூட்டம் என்பதால் விமல் தரப்பினர் பங்கெடுக்கவில்லை என்று தெரியவருகிறது.
ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக அரசியல் ரீதியாக செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படாததால் இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்ததாகவும், அதனால் தான் ஆளும் பங்காளிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரியவருகிறது.
எனினும், மொட்டுக் கட்சியின் அழைப்பை இ.தொ.கா. நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது.
