‘மொட்டும், சேவலும் கூட்டு நாடகம்’ – வேலுகுமார் எம்.பி. சுட்டிக்காட்டு

” மொட்டுக்கட்சி நாட்டை ஏமாற்றியது. சேவல் கட்சி மலையக மக்களை ஏமாற்றியது. இன்று இரு தரப்புகளும் இணைந்து நாடகம் ஆடுகின்றனன.” என்று கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

” நாட்டு மக்கள் விரக்தியில் உள்ளனர். தாம் ஏமாற்றப்பட்டோம் என்ற வேதனையில் உள்ளனர். மலையக மக்கள் அதையும் தாண்டிய கோபத்தில் உள்ளனர். எந்த ஒரு அரசாங்கத்திலும் இடம்பெறாத பாராபட்சம், இந்த அரசாங்கத்தில் மலையக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மொட்டு கட்சி முழு நாட்டையும் ஏமாற்றியுள்ளது. சேவல் கட்சி முழு மலையக மக்களையும் ஏமாற்றியுள்ளது. இன்று இருவரும் சேர்ந்து நாடகம் ஆடுகின்றனர்.

அரசாங்கத்தில் இருந்தால் தான் அனைத்தையும் செய்யலாம் என்றார்கள், அரசியல் பலம் வேண்டும் என்றார்கள், எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கு வாக்களித்து பிரயோசனம் இல்லை என்றார்கள், எம்மால் தான் ரூபா 1000 பெற்றுத்தர முடியும் என்றார்கள். பின்னர் பெற்றுக்கொடுத்தும் விட்டோம் என்றார்கள். பல்கலைக்கழகம் கொண்டு வருவோம் என்றார்கள். பணம் ஒதுக்கிவிட்டோம் என்றார்கள்.

ஆனால், இறுதியாகவும், மக்கள் வீட்டுக்கு போக சொல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து 1000 ரூபா பேச்சு நடத்தினோம் என்றார்கள். பல்கலைக்கழகம் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது என்று அறிக்கை விட்டார்கள். அப்படியாயின் உண்மை என்ன என்பது தெட்டத்தெளிவாகின்றது.

இன்று அரசாங்கம் வேண்டாம் என்கின்றார்கள். அமைச்சு பதவியை ராஜினாமா செய்தோம் அதனால் எங்களுக்கு முதுகெலும்பு இருக்கு என்கின்றார்கள். மக்கள் சொன்னதை செய்தவர்களாக வெளியிலே காட்ட முயற்சிக்கிறார்கள். உண்மையில் நீங்கள் சொன்னது என்ன?, மக்கள் கேட்டது என்ன?

முதுகெலும்பு இருந்திருந்தால்.., 1000 ரூபாவை பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும், தோட்டக்காணிகள் மக்களிடம் இருந்து பறிக்கப்படுவதை நிறுத்தியிருக்க வேண்டும், உறுதியளிக்கப்பட்ட பிரதேச செயலகங்களை உருவாக்கியிருக்க வேண்டும், நாம் ஆரம்பித்து வைத்த தனி வீட்டு திட்டங்களை தொடர்ந்திருக்க வேண்டும், மக்கள் கேட்ட விலை குறைப்பை செய்திருக்க வேண்டும்,

அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டை தடுத்து நிறுத்த வழி செய்திருக்க வேண்டும், குறைந்த பட்சம் கோதுமை மா சலுகையாவது பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும், அதையெல்லாம் விட்டுவிட்டு, “பதவி துறந்தோம், முதுகெலும்பு இருக்கு” என மார்தட்டிக்கொள்வது வேடிக்கையாக இருக்கிறது!

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles