ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து பயணிக்காவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் இரு கட்சிகளுக்கும் பின்னடைவு ஏற்படக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆசியுடன் களமிறங்கினால் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவார்.அவ்வாறு இல்லாவிட்டால் தோல்வியே ஏற்படும்.
ரணிலை பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிக்கு மொட்டு கட்சியே கொண்டுவந்தது. எனினும், மொட்டு கட்சி எதிர்பார்த்த அரசொன்று அமையவில்லை. எனவே, இரு தரப்புக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் பேச்சுமூலம் தீர்க்கப்பட வேண்டும்.
பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு இணைந்து பயணித்தால் ரணிலுக்கு வெற்றி நிச்சயம். அது மொட்டு கட்சிக்கும் அல்ல. தனிவழியில் சென்றால் இரு தரப்புகளுக்கும் பின்னடைவு ஏற்படும்.” – என்றார்.