மொட்டு உறுப்பினர்கள் இருவர் எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக தகவல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் ஒரு எம்.பி., மாவட்ட தலைவராக உள்ளார். அமைச்சராகவும் சில காலம் பணியாற்றினார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஏமாற்றம் அடைந்த நிலையில் இருவரும் எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்ததாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த இரண்டு எம்.பி.க்களும் இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எவ்வித பரிசீலனையும் பெறவில்லை என்பதும் அறியப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களால் ஏமாற்றமடைந்த நிலையில் இதற்கு முன்னர் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தனர்.

Related Articles

Latest Articles