மொட்டு கட்சிக்கு அநுர அரசு பயந்துவிட்டதாம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பயந்துவிட்டது என்பதையே கைது சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது என்று மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவம் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ரேணுக பெரேரா இனவாதி அல்லன். இனவாதத்துக்கு எதிராக செயற்பட்ட நபர் அவர். 1989 இல் ஜே.வி.பியினர் இனவாதத்தை பரப்பும்போது அதற்கு எதிராக போராடிய விஜேகுமாரதுங்கவின் கட்சியில் இருந்தவர்தான் ரேணுக பெரேரா. இன ஐக்கியத்துக்காக போராடியவர். அப்படியான ஒருவரை கைது செய்துள்ளமை அரசாங்க ஒடுக்குமுறையாகும்.

நாம் எதை செய்தாலும் மௌமாக இருங்கள் என அரிசயல் எதிராளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இதுவாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு, இந்த அரசாங்கம் பயந்துவிட்டது என்பதையும் இது எடுத்துக்காட்டுகின்றது. எமது கட்சிமீது இவ்வளவு பயம் இருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.”- என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles