ஜனாதிபதி தேர்தலுக்காக சரியான சந்தர்ப்பத்தில் பொதுஜன பெரமுன ‘ஏஸ்’ துரும்பை வெளியில் விடும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் தேர்தல்களுக்கான வருடம் என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், ஜனாதிபதி வேட்பாளர் மறைத்துவைக்கப்பட்டிருந்தாலும் நாட்டு மக்களின் பெரும்பான்மை வாக்குகள் பொதுஜன பெரமுனவுக்கே உள்ளது என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க, சிவில் செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், ஜனாதிபதி தேர்தல்களில் வேட்பாளர்களாக வரிசையில் வருவார்கள். ஜனாதிபதித் தேர்தல் பொதுத்தேர்தல், மாகாண சபைத் தேர்தல், மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் என எந்தத் தேர்தலை நடத்தினாலும் பாரிய வித்தியாசத்தால் வெல்லப்போவது பொதுஜன பெரமுனவே.
போராட்டக்காரர்கள் மற்றும் கலகக் காரர்கள் ஒன்றிணைந்து அழிவுக்கு வித்திட்ட நாடு, தற்போது இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நாட்டுக்கான எதிர்காலத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமங்க உறுப்படுத்தியுள்ளார். அந்த வகையில் கடந்த 10 நாட்களில் உலகின் தலைசிறந்த நாடுகளின் தலைவர்கள் நான்கு பேர், ஜனாதிபதியை சந்தித்துள்ளமையானது அரசாங்கம் சர்வதேசத்தின் நம்பிக்கையை உச்சளவில் வெற்றி கொண்டுள்ளதையே காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.