ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் நாடாளுமன்றம் தெரிவாகி, தற்போது அமைச்சர்களாக உள்ள சிலர் மொட்டு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச நிறுவனங்களின் தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்களை புறக்கணிக்கும் வகையில் செயற்படுகின்றனர் என்று மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின்போது இவ்விடயம் தொடர்பில் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது.
எனவே, மொட்டு கட்சியின் நியமனங்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது எனவும் அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
