மொட்டு கட்சியின் ஆதரவு ரணிலுக்கே!

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு வழங்கும் என்று அக்கட்சி உறுப்பினரான அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மொட்டு கட்சி ஆதரவு வழங்காவிட்டால் தாங்கள் எந்த பக்கம் நிற்பீர்கள் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை தொடர்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும். அவருக்கு ஒத்தழைப்பு வழங்க வேண்டும். கட்சிக்குள்ளும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளேன்.

எனவே, இறுதியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் முடிவை கட்சி எடுக்கும். நிச்சயம் ஆதரவு வழங்கும் என உறுதியான நம்பிக்கை உள்ளது.” – என்றார்.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது. சிலர் தற்புகழுக்கு – தமது தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்கு நீதிமன்றத்தை நாடலாம். தேர்தல் நடப்பது உறுதி.” – என்றார்.

Related Articles

Latest Articles