மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நவம்பரில் அறிவிப்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் நவம்பர் மாதம் பெயரிடப்படுவார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநாடு நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. எனவே, இக்கூட்டத்துக்கு முன்னதாக வேட்பாளர் தீர்மானிக்கப்பட்டு, கூட்டத்தின்போது அறிவிக்கப்படலாம் எனவும் அவர் கூறினார்.

” நாட்டில் ஏற்பட்டிருந்த ஸ்தீரமற்றதன்மையை ஸ்தீரப்படுத்துவதற்காகவே ஜனாதிபதிக்கு (ரணில்) ஆதரவு வழங்கினோம். மாறாக அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் அவருக்கு ஆதரவு என்ற இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை. மொட்டு கட்சியின் சார்பிலேயே வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார்.” – எனவும் ரஞ்சித் பண்டார கூறினார்.

Related Articles

Latest Articles