மொட்டு கட்சியில் போட்டியிட உறுப்பினர்கள் முண்டியடிப்பாம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு இருந்ததைவிடம் தற்போது கேள்வி அதிகரித்துள்ளது. உள்ளாட்சிதேர்தலில் மொட்டு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு கடும் போட்டி நிலவுகின்றது – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” உள்ளாட்சிமன்ற தேர்தலில் மொட்டு கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு பலரும் முன்வந்துள்ளனர். இதனால் கடும் போட்டி நிலவுகின்றது. கடந்தமுறையைவிடவும் இம்முறை கேள்வி அதிகரித்துள்ளது. இது சிறந்த அறிகுறியாகும்.

சில சபைகளில் ஐக்கிய தேசியக்கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். அதில் எமது வேட்பாளர்களும் இருப்பார்கள். மேலும் சில சபைகளில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவோம். அதில் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர்களும் இருப்பார்கள். சில இடங்களில் இரு தரப்பினரும் தனிவழி செல்வோம். எனினும், எம்மத்தியில் புரிந்துணர்வு இருக்கும்.

மத்திய அரசமைப்பதற்காக ஏற்பட்ட இணக்கப்பாடு மற்றும் அரசியல் நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்ளாட்சிமன்ற தேர்தல் எதிர்கொள்ளப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles