ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து பயணிப்பதற்கு எதிர்பார்ப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு இவர் ஆதரவளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே மொட்டு கட்சியுடன் மீள இணைவதற்கு அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
கண்டி மாவட்ட தலைமைப் பதவியை ஏற்று கட்சியை வெற்றிபாதைக்கு கொண்டுசெல்ல தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.