மொட்டு கட்சி ஆதரவின்றி ரணில் வெல்வார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவு இல்லாவிட்டாலும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே வெற்றிபெறுவார் என்று அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுடன் பயணிக்க வேண்டும் என்ற முடிவிலேயே மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச மற்றும் சமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் இருந்தனர். எனினும், நாமல் உள்ளிட்ட தரப்பினரே இதற்கு எதிராக செயற்பட்டனர். அதன் பிரதிபலன் தேர்தலில் அவர்களுக்கு கிடைக்கும்.

தேசிய சபைக் கூட்டத்தில் 16 எம்.பிக்களே இருந்துள்ளனர். மொட்டு கட்சியில் உள்ளவர்களில் 90 வீதமானோர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு. நாடு பற்றி சிந்தித்து ஜனாதிபதி தீர்மானங்களை எடுத்தாரேதவிர, மொட்டு கட்சியை திருப்திப்படுத்த முடிவுளை எடுக்கவில்லை என்பதை மொட்டு கட்சியினரே தற்போது வெளிப்படுத்திவிட்டனர்.

மொட்டு கட்சி தனது முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என நாம் வற்புறுத்தப்போவதில்லை. ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சி ஆதரவு வழங்காவிட்டாலும் ரணில் விக்கிரமசிங்கவே வெற்றிபெறுவார்.
மொட்டு கட்சியின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.” – என்றார்.

Related Articles

Latest Articles