ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அதன் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் இன்று முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
மாலை 6 மணிக்கு அலரிமாளிகையில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது.
பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர், பங்காளிக்கட்சிகள் இன்றி, மொட்டு கட்சி உறுப்பினர்களை மட்டும் பிரதமர் தனியே சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.