மொட்டு சின்னத்தில் களமிறங்குவாரா ரணில்?

அனைத்து தரப்புகளையும் இணைத்துக்கொண்டே ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் எனவும், பொது சின்னமாக மொட்டு சின்னம் அமையாது எனவும் ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தை கைவிட்டுள்ளது என முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ யானை சின்னமே ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னம், அதனை நாம் கைவிடவில்லை. யானை சின்னத்தின்கீழ் ஐதேகவின் பயணம் தொடரும். எனினும், ஜனாதிபதி தேர்தலில் தேசிய பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார். அதற்காக பொது சின்னமொன்று அவசியம் எனக் கூறப்படுகின்றது. எனினும், அந்த பொது சின்னம் மொட்டு கட்சியாக அமையாது.

அதேபோல அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு பயணிப்பதற்கே ஜனாதிபதி முயற்சிக்கின்றார்.” – என்றார்.

Related Articles

Latest Articles