மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று அத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி சுமித் அழககோன் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே தொடர்ந்தும் திணைக்கள பணியில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் கூறினார்.
இலஞ்ச ஊழல் தொடர்பில் பொது மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளின் பிரகாரம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
