‘மோதலுக்கு முடிவு’ – ‘கை’யும், ‘மொட்டும்’ பேச்சு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குமிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

வரவு – செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் இச்சந்திப்பு இடம்பெறும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. பாதீட்டுக் கூட்டத்தொடர் எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கிலேயே பிரதமர் மஹிந்தவின் ஆலோசனையின் பிரகாரம் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Related Articles

Latest Articles